Monday, June 18, 2012

பறந்து பறந்து கலைசேவை செய்யும் நடிகை

ணித ஆசிரியையாகவும் அதே நேரம் தன் மண வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்ள முயலும் துணிச்சலான கிராமத்துப் பெண்ணாகவும் வர்ணம் படத்தில் நடித்திருந்தார் மோனிகா.
நிறைய அழகும் அதைவிட அதிக இளமையும் கொண்ட மோனிகாவை அதன்பிறகு காணவில்லை.

     வர்ணம் படத்திற்குப் பிறகு எங்கே போய் விட்டார் மோனிகா?
" எங்கேயும் போகலைங்க... குறும்புக்காரப் பசங்க படம் விரைவில் வெளிவர இருக்கிறது..."
     சென்னையில்  மோனிகாவை பார்க்க முடிவதில்லையே...
"மலேசியா, துபாய் ,அபுதாபி ,மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்று பறந்து கொண்டிருக்கிறேன்., அதனால் தான் பார்க்க முடிவதில்லை...
மலேசியத் தமிழ்ப்படமான 'திட்டம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்... ராதாரவி சார் போன்று பெரிய நடிகர்கள் நடிக்கும் திட்டம் படம் முழுக்க முழுக்க மலேசியத் தொழில் நுட்பக்கலைஞர்கள் பணியாற்ற வளர்ந்து வருகிறது....
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் அழைப்புகளை ஏற்று மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சில வளைகுடா நாடுகளில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்திக் கொண்டிருக்கிறேன்..."
மலையாளப்படத்திலும் நடிக்கிறீர்களா..?
'ஆம்... குசேலன் படத்தின் மூலப் படமான கதை பரையும்போல் படத்தை இயக்கிய இயக்குனர் எம்.மோகனன் இயக்கத்தில் 916 என்று ஒரு படத்தில் நடிக்கிறேன்... இந்த வருடத்திலேயே இந்த மூன்று படங்களும் வெளியாகவிருக்கின்றன.."
      சொல்லிவிட்டு மலேசியா பறந்து விட்டார் மோனிகா.