Friday, August 10, 2012

இருபத்தோராம் நூற்றாண்டின் காதலைச் சொல்லும் படம்


காதல் பலவிதத்தில் சினிமாவில் கையாளப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை. ஏழு நாட்கள் போதும்...என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம்தான் நந்தனம்.

இன்றைய பெண்களும் சரி பசங்களும் சரி வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே தங்கள் சக துணையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு மென்மையான காதலை அழகான நேர்த்தியுடன் சிற்சில திருப்பங்களுடனும், இறுதியில் சொல்லப்பட்டிருக்கும் தீர்வும் இன்றைய காதலர்கள் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 

செவாலியே சிவாஜியின் பேரன். சிங்கக்குட்டி  படத்தின் மூலம் மிகப் பிரமாண்டமாக  அறிமுகம் செய்யப்பட்டவர் சிவாஜி தேவ். தன் தாத்தாவின் பெயரையே தனக்கும் வைத்து அழகு பார்க்கப்பட்டவர். ராம்குமார் அவர்களின் புதல்வன். சிங்கக்குட்டி முடித்த கையோடு லண்டனில் நடிப்புப்  பயிற்சியை  மேற்கொள்ளச் சென்றவரின் அடுத்த படம் நந்தனம். நந்தனம் தனக்கு ஒரு காதல் நாயகன் அந்தஸ்த்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறார் சிவாஜி தேவ். 

காவலன் நாயகி மித்ரா காவலனுக்குப் பிறகு  எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தவர் இதன் கதையில் ஒன்றி நடிக்க  ஒப்புக்கொண்டார். 


மற்றொரு கதாநாயகனாக கையில் ஒரு கோடி ரிஷி நடிக்கிறார். காமடி களத்தை அயன் ஜெகன் களைகட்ட வைக்க,   ஈசனுக்குப் பிறகு  ஒரு மிரட்டலான கதா பாத்திரத்தில் நடிக்கிறார் ஏ. எல் அழகப்பன். ஆர் பாலு,  ஏ. வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த என். சி. ஷியமலன் முதன்முறையாக கதை திரைக்கதை வசனம் எழுதி அறிமுகமாகிறார்.

முதல் கட்டப்படப்பிடிப்பு  சென்னையில் உள்ள நந்தனம் மற்றும் ஹெச் சி எல் போன்ற பிரபல ஐ டி நிறுவனங்களில்  அனுமதி பெற்று  நடைபெற்றது. அன்வர் படத்திற்கு இசையமைத்த கோபி சுந்தர் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார். ஆறு பாடல்கள் படமாக்கப்பட்டு வருகிறது. எல். மோகன் ஒளிப்பதிவு செய்ய, வி. டி. விஜயன் எடிட்டிங் செய்ய  'நந்தனம்' வேகமாக வளர்ந்து வருகிறது.  


Tuesday, August 7, 2012

பாலாவின் 'பரதேசி' -சிறப்பு தகவல்கள்

சேது, நந்தா, பிதாமகன், நான்கடவுள், அவன்-இவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலா, பரதேசி என பெயர் இடப்பட்டிருக்கும் புதியபடத்தை வழக்கம் போல் வித்தியாசமான கதைபின்னணியில் இயக்கியிருக்கிறார்.
1930-களில் நடந்த உண்மைச்சம்பவங்களை மையமாகக்கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வாமுரளி மற்றும் கதாநாயகிகளாக வேதிகா C குமார்,தன்ஷிகாஉள்ளிட்டபலர்நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ளசாலூர், மானாமதுரை மற்றும் கேரளமாநிலம் மூணார், தலையார், தேனிமாவட்ட கண்ணக்கரைவனப்பகுதிகளில் இடைவிடாது நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இயக்குனர்பாலாஇசைஅமைப்பாளர் G V பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர்செழியன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன், படத்தொகுப்பாளர் கிஷோர்ஆகியோருடன்முதன்முறையாகஇணைந்துபணிபுரிந்திருக்கிறார்.
பரதேசி படத்தின்படப்பிடிப்பு 90 நாட்களில் முடிவடைந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
செப்டம்பர்19அன்றுஇத்திரைபடத்தின்பாடல்மற்றும்டிரைலர்லண்டனில்வெளியிடதிட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபர்மாதம்தமிழ்மற்றும்தெலுங்குஆகியஇருமொழிகளிலும்உலகம்முழுவதும்வெளியிடஉறுதிசெய்யப்பட்டுள்ளது.







Monday, June 18, 2012

பறந்து பறந்து கலைசேவை செய்யும் நடிகை

ணித ஆசிரியையாகவும் அதே நேரம் தன் மண வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்ள முயலும் துணிச்சலான கிராமத்துப் பெண்ணாகவும் வர்ணம் படத்தில் நடித்திருந்தார் மோனிகா.
நிறைய அழகும் அதைவிட அதிக இளமையும் கொண்ட மோனிகாவை அதன்பிறகு காணவில்லை.

     வர்ணம் படத்திற்குப் பிறகு எங்கே போய் விட்டார் மோனிகா?
" எங்கேயும் போகலைங்க... குறும்புக்காரப் பசங்க படம் விரைவில் வெளிவர இருக்கிறது..."
     சென்னையில்  மோனிகாவை பார்க்க முடிவதில்லையே...
"மலேசியா, துபாய் ,அபுதாபி ,மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்று பறந்து கொண்டிருக்கிறேன்., அதனால் தான் பார்க்க முடிவதில்லை...
மலேசியத் தமிழ்ப்படமான 'திட்டம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்... ராதாரவி சார் போன்று பெரிய நடிகர்கள் நடிக்கும் திட்டம் படம் முழுக்க முழுக்க மலேசியத் தொழில் நுட்பக்கலைஞர்கள் பணியாற்ற வளர்ந்து வருகிறது....
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் அழைப்புகளை ஏற்று மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சில வளைகுடா நாடுகளில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்திக் கொண்டிருக்கிறேன்..."
மலையாளப்படத்திலும் நடிக்கிறீர்களா..?
'ஆம்... குசேலன் படத்தின் மூலப் படமான கதை பரையும்போல் படத்தை இயக்கிய இயக்குனர் எம்.மோகனன் இயக்கத்தில் 916 என்று ஒரு படத்தில் நடிக்கிறேன்... இந்த வருடத்திலேயே இந்த மூன்று படங்களும் வெளியாகவிருக்கின்றன.."
      சொல்லிவிட்டு மலேசியா பறந்து விட்டார் மோனிகா.

Thursday, May 31, 2012

'உருமி'பத்து வருடம் கழித்துப் பார்த்தாலும்புதிதாகத் தெரியும்!-பிருத்விராஜ்


மீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் உருமி திரைப்படத்தின் நாயகர்கள் ஆர்யா, பிரித்விராஜ், இசையமைப்பாளர் தீபக் தேவ் மற்றும் உருமி படத்தின் ஆடை வடிமைப்பாளர் ஏகா ஆகியோர் தமிழ் ரசிகர்களுக்கு தங்களது  நன்றியினை தெரித்துக் கொண்டனர்.
நடிகர் பிருத்விராஜ் உருமியின் வெற்றி குறித்துப் பேசும் போது, “ நேற்று (புதன் கிழமை) இரவுக் காட்சிக்கு சத்யம் திரையரங்குக்குச் சென்ற போது இது நம்ம படம்தானா என்கிற சந்தேகமே வந்துவிட்டது..அந்த அளவிற்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக உருமி ஓடிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சிஎங்களது கடின உழைப்பினை அங்கீகரித்த தமிழ் ரசிகர்களுக்கு இதய பூர்வமான நன்றிகள்.
உருமி ஒரு வருடத்திற்கு முன் மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும்தமிழுக்கென்று பாடல், திரைக்கதை அமைத்து இப்பொழுது வெளியாகியிருக்கிறது.
ராவண் படத்தில் நானும் சந்தோஷ் சிவனும் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் உருமி படம் தயாரிப்பதற்கான சிந்தனை வித்திட்டது. படம் எடுக்கும் ஆரம்பிக்கும் முன்பே இது இந்த மொழி பேசும் மக்களுக்கான படம் என்று இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளும் படமாக ஒரு கலையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து எடுக்கப்பட்ட படம்.
உருமி மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம்.  சந்தோஷ் சிவனின் திட்டமிட்ட உழைப்பில் கிட்டத்தட்ட 65 நாட்களில் எடுக்கப்பட்ட படம்.
ஆர்யா,பிரபுதேவா, ஜெனிலியா, வித்யாபாலன், நித்யா மேனன் , தபு என்று இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நமது முன்னோர்களின் வீரம், பண்பு, கலாச்சாரம் மற்றும் அந்நியர்களை எதிர்த்துப் போராடிய தீரம் ஆகிய வற்றை பதிவு செய்யும் படமாகையால் மிகவும் ஆர்வத்துடன் நடித்தனர்.
மிகச்சிறந்த நடிகர்கள் மத்தியில் நானும்  நடித்திருப்பதால் எனக்கான ஒரு தனி அடையாளமாக எனது கதாபாத்திரம் அமைந்து விட்டது. 14-15 ஆம் நூற்றாண்டுகளில் நம் மீது திணிக்கப் பட்ட அந்நிய ஆதிக்கம் இன்னும் பல ரூபங்களில் நம்மை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது….பொருட்கள் வடிவிலும் அறிவு சார்ந்த வகையிலும்….
இந்தப் படத்திற்காக 6 மாதங்கள் கடினமாக உழைத்து எனது உடலை முறுக்கேற்றினேன்எனது தமிழ் உச்சரிப்பு மிகவும் கம்பீரமாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எனது நண்பரும் உருமியின் வசனகர்த்தாவுமான சசிகுமார்தான்
மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் பேசிவிட்ட உருமி விரைவில் ஆங்கிலம் பேச இருக்கிறது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை ஜப்பான் வாங்கியிருப்பதே உருமியின் வெற்றிக்குச் சான்று.
படத்தின் முக்கியத்துவம் சிதைந்து விடாமல் தமிழில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வெளியிட்டிருப்பது போன்று ஹிந்தியில் யாராவது முன்வந்தால் நிச்சயம் ஹிந்தியிலும் உருமி வெளியாகும்
இன்னும் பத்து வருடம் கழித்துப் பார்த்தாலும் புதிதாகத் தெரியும் அளவிற்கு காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் சிவன்…” என்று கூறினார்.

சிறிய வயது பிரித்விராஜின் அப்பாவாக வாஸ்கோடகாமாவை எதிர்க்கும் முதல் இந்திய அரசன் சேதுராயன்  நடித்திருக்கும் ஆர்யா, “ சந்தோஷ் சிவன் படத்தில் நடிப்பது என்பது எனது மிகப்பெரிய கனவு.  எனது சம்பந்தப் பட்ட காட்சிகளை மூன்றே நாட்களில் எடுத்திருந்தாலும் எனது கதாபாத்திரத்தை மிகவும் பேசப்படும் ஒன்றாக காட்டியிருப்பது நிச்சயமாக சந்தோஷ் சிவனின் மேஜிக் தான்… 3 நாட்கள் தான் நடித்திருக்கிறேன் என்றாலும் 20 நாட்கள் டப்பிங் பேசியிருக்கிறேன்…. இது போன்ற வரலாற்றுக் களங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் படும் படங்களில்  நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்….” என்றார்.
2003 இல் மலையாள இயக்குனர் சித்திக்-ஆல் மம்மூட்டி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற  கிரோனிக் பேச்சிலர் என்ற படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த தீபக் தேவ் தான் உருமியின் மிரட்டலான இசைக்கும் சொந்தக்காரர்.
தீபக் தேவிடம் - உருமியின் சவாலான இசையைப்பற்றிக் கேட்டபொழுது,” படம் ஆரம்பிக்கும் முன்பே இது பலமொழிகளில் வெளியாகப் போகும் படம் என்று இயக்குனர் கூறிவிட்டதால் உருமியின் இசை எல்லா மொழிகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இசையமைத்தேன்மேலும் இந்தப் படத்திற்கு நவீன இசைக்கருவிகள் ஏதும் பயன்படுத்த முடியாதுமுழுக்க முழுக்கப் பழமையான நமது நாட்டுப்புற இசைக்கருவிகளைக் கொண்டே முழுப்பின்னணி இசையையும் மற்றும்  பாடல்களுக்கான இசையையும் அமைத்துள்ளேன்…. தென்னிந்திய சினிமா என்று எடுத்துக் கொண்டால் அது சந்தேகமே இல்லாமல் தமிழ்சினிமாதான் இங்குதான் கடின உழைப்பிற்குச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்உருமியின் இசைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதுதமிழ் ரசிகர்களுக்கு நன்றிஇயக்குனர் சந்தோஷ் சிவன் காட்சிகளை விவரித்த போதே உருமி என் சிந்தனையில் படமாக ஓட ஆரம்பித்து விட்டது..என்று கூறினார்.

14-15 ஆம் நூற்றாண்டு உடைகளுக்கு எந்த விதமான ஆதாரங்களும் குறிப்புகளும் இல்லாத நிலையில்  உருமியில் வரும் அரசர் முதல் போராளி, சாமான்ய மக்கள், பெண்கள் குழந்தைகள் என்று அனைவருக்கும் மிகவும் அற்புதமான ஆடைகளை வடிவமைத்திருக்கும் ஏகா, மும்பையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் மற்றும் ராவண்  படத்தில் உதவி ஆடை வடிவமைப்பாளர். தனது முதலாவது படமான உருமிக்கு புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களில் அவர் வரைந்துள்ள ஆடைகளே அடிப்படை என்கிறார். அத்துடன் மேலும் சில வரலாற்று ஆதாராங்களையும் வைத்து உருமி படத்திற்கு மிகவும் பொருத்தமான ஆடைகளை வடிவமைத்ததாகக் கூறினார் ஏகா.

Sunday, April 1, 2012

சங்ககிரி ராஜ்குமாரை பெரியாரின் பேரனாக பார்க்கிறேன் .! -பாரதிராஜா பாராட்டு.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

Friday, March 23, 2012

சேர மன்னனின் வீர தீர பெருமைகளைச் சொல்லும் ' உருமி '

         தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்  ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம் உருமி. ரூ30 கோடி செலவில் தயாராயிருக்கும்  . இந்தப் பிரமாண்டமான படத்துடன் இன்னொரு பிரமாண்டமும் சேர்ந்திருக்கிறது. ஆம்தமிழ்த் திரைப்படத்துறையின் பிரமாண்டத் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கலைப்புலி எஸ் தாணு உருமி படத்தின் உலக விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார். தயாரிப்புக்கென்று 30 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட உருமி திரைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்குக் கொண்டு செல்லும் பொருட்டு மேலும் பல கோடிகளைச் செலவு செய்திருக்கிறார் கலைப்புலி தாணு.

தமிழகத்தை ஆண்ட அன்றைய  மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னனின் வீர தீர பெருமைகளையும் அவனது கடல் ஆதிக்கத்தைக்கூறும் படமாக உருமி இருக்கும். உருமி  படத்தினை அவர் ஒரு பொழுதுபோக்குப் படமாக மட்டும் இல்லாமல்நமது பெருமைகளைச் சொல்லும் படமாக  சமூக நோக்கோடு சொல்லியிருப்பதோடுஇரண்டு காலகட்டத்தில் உள்ள நிகழ்வை தனது  வரலாற்று நுணுக்கத்துடன் கையாண்டு பிரமிக்க வைத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் சிவன். 

15 ஆம் நூற்றாண்டையும்  இருபத்தியோராம் நூற்றாண்டையும் கண்முன்னே நிறுத்தும் இந்தப் படம்.
     
'வேட்டைபடத்துக்குப் பிறகு ஆர்யாவின் இன்னொரு பரிமாணத்தை உருமியில் காணலாம்.   பிருதிவிராஜ்பிரபுதேவாஆர்யாமதராஸப்பட்டினம் அலெக்ஸ் ஆகியோருடன்  ஜெனிலியாவித்யாபாலன்,  தபு,   நித்யா மேனன் என ஒரு நட்சத்திர  பட்டாளமே போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள்.
  வசனங்களை சசிகுமரன் எழுதகவிப்பேரரசு வைரமுத்து பட்டை தீட்டியிருக்கும்  அற்புதமான   பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தீபக் தேவ். மற்றும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர்பிரசாத் உருமியை எடிட் செய்திருக்கிறார். கலை இயக்குனராக சுனில் பாபுவும் சண்டைப்பயிற்சியினை அனல் அரசுவும் செய்திருக்கிறார்கள். சவாலான 15 ஆம் நூற்றாண்டு காட்சிகளைத் தம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் சுனில் பாபு. அதே நேரம் சுருள்வாள்சண்டைகளரிச் சண்டை என்று தன் பங்குக்கு மிரட்டியிருக்கிறார் அனல் அரசு.

விரைவில் திரைக்கு வரவிருக்கிறது உருமி.

Thursday, February 23, 2012

முருகன்‌ மந்‌தி‌ரம்‌ எழுதி‌ய ஹி‌ட்‌ கா‌தல்‌ பா‌டல்‌

'வி‌ருந்‌தா‌ளி‌' படத்‌தி‌ன்மூ‌லமா‌க பா‌டலா‌சி‌ரி‌யர்ஆக அறி‌முகமா‌ன முருகன்மந்‌தி‌ரம்வி‌ரை‌வி‌ல்வெ‌ளி‌யா‌க உள்‌ள "கா‌தல்பா‌தை‌" படத்‌தி‌ல்‌‌ இடம்‌பெ‌ற்‌றுள்‌ள அனை‌த்‌து பா‌டல்‌களை‌யும்எழுதிஉள்‌ளா‌ர்‌. எஸ்‌.எஸ்‌.குமரனி‌ன்இசை‌யி‌ல்வெ‌ளி‌யா‌கி‌யு‌ள்‌ள இப்‌படத்‌தி‌ன்இடம்பெ‌ற்‌றுள்‌ள நா‌ன்‌கு பா‌டல்‌களும்மெ‌லடிபா‌டல்‌கள்என்‌பது குறி‌ப்‌பி‌டத்‌தக்‌கது.

"கா‌தல்பா‌தை‌" படத்‌தி‌ன்பா‌டல்‌களைகே‌ட்‌டவர்‌கள்வரி‌களை‌யு‌ம்சி‌லா‌கி‌த்‌துப்பே‌சுவதா‌ல்‌, உற்‌சா‌கத்‌துடன்அடுத்‌தடுத்‌த படங்‌களி‌ன்பா‌டல்‌களி‌ல்கவி‌தைமழைபொ‌ழி‌ய தயா‌ரா‌கி‌க்கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்முருகன்மந்‌தி‌ரம்‌.

உதா‌ரணமா‌க, கா‌தல்பா‌தைபடத்‌தி‌ன்ஒரு பா‌டலி‌ல்‌,

 "இருவி‌ழி‌யி‌ல்கலகம்நூ‌று
இமை‌களி‌லேஅவளி‌ன்பே‌ரு

தே‌வதை‌யி‌ல்உறவுஉறவு
எனக்‌கு அது, இரவல்சி‌றகு"

மற்‌றும்

"இலை‌களும்கீழேவி‌ழுந்‌தா‌ல்
நதிஅதைஇழுத்‌துப்போ‌கும்
நி‌ழல்‌களைஇழுத்‌துப்போ‌கா‌தே

வெ‌ளி‌ச்‌சத்‌தி‌ல்தெ‌ரி‌யு‌ம்வண்‌ணம்
இருளி‌லேகருப்‌பா‌ய்‌ப்போ‌கும்
கண்‌ணோ‌டு குற்‌றம்கி‌டை‌யா‌தே‌"

போ‌ன்‌ற கவி‌த்‌துவமா‌ன பா‌டல்வரி‌களைசொ‌ல்‌லலா‌ம்‌.
      ஏற்‌கனவே‌, எஸ்‌.எஸ்‌.குமரனி‌ன்இசை‌யி‌ல்வெ‌ளி‌யா‌ன "வி‌ருந்‌தா‌ளி‌" படத்‌தி‌ல்‌ 4 பா‌டல்‌களை‌யு‌ம்‌, எஸ்‌.எஸ்‌.குமரன்தயா‌ரி‌த்‌து, இயக்‌கி‌, இசை‌யமை‌த்‌த "தே‌நீ‌ர்வி‌டுதி‌" படத்‌தி‌ல்‌ 3 பா‌டல்‌களை‌யு‌ம்முருகன்மந்‌தி‌ரம்எழுதிஉள்‌ளா‌ர்‌.

    தற்‌போ‌து, எஸ்‌.எஸ்‌.குமரன்இயக்‌கம்மற்‌றும்இசை‌யி‌ல்தயா‌ரா‌கி‌க்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ "கே‌ரள நா‌ட்‌டி‌ளம்பெ‌ண்‌களுடனே‌", "ரா‌ஜாபா‌ரதிசவு‌ண்‌ட்சர்‌வி‌ஸ்‌", "மும்‌பை‌யி‌ல்ஒரு கா‌தல்‌" உள்‌பட  படங்‌களி‌ல்முருகன்மந்‌தி‌ரம்பா‌டல்‌கள்எழுதுகி‌றா‌ர்‌.

இதுவரைமுருகன்மந்‌தி‌ரம்எழுதிவெ‌ளி‌யா‌கி‌யு‌ள்‌ள பா‌டல்‌கள்

பே‌சுவது கி‌ளி‌யா / இசை‌: .ஆர்‌. ரெ‌ஹா‌னா‌ / 1 பா‌டல்
வி‌ருந்‌தா‌ளி / இசை‌: எஸ்‌.எஸ்‌.குமரன்‌ / 4 பா‌டல்‌கள்
கா‌தல்தோ‌ழி/ இசை‌:  வீ‌.தஷி‌ / 1 பா‌டல்
கா‌தலைபறி‌க்‌கா‌தீ‌ர்/ இசை‌ :  கபி‌லே‌ஷ்‌வர்‌ / 1 பா‌டல்
தே‌நீ‌ர்வி‌டுதி/ இசை‌:  எஸ்‌.எஸ்‌.குமரன்‌ / 3 பா‌டல்‌கள்
பயபு‌ள்‌ள / இசை‌ :  கபி‌லே‌ஷ்‌வர்‌ / 1 பா‌டல்
கா‌தல்பா‌தை‌ / இசை‌ :  எஸ்‌.எஸ்‌.குமரன்‌ / 4 பா‌டல்‌கள்

Friday, February 3, 2012

கலக்குது கம்பி மத்தாப்பூ..

'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சி.சத்யா.அந்த படத்தில் 'மாசமா ஆறேழு மாசமா..'என்ற பாடல்.பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.அடுத்ததாக அவரது இசையில் வெளிவர இருக்கும் படம் 'சேவற்கொடி' இந்த படத்திலும் 'கம்பி மத்தாப்பூ கண்ணு கண்ணு..'என்ற சூப்பர் மேலோடி பாடல் ஓன்று இருக்கிறது.படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.படம் வந்தபின் இன்னும் சூப்பர்  ஹிட் ஆகும் என்பது உறுதி.ராதா மோகனின் 'அபியும் நானும்' படத்திற்கு வசனம் எழுதிய ஆர் .சுப்பிரமணியன்.இப்படத்தை இயக்கியிருக்கிறார்.பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார்.வைரமுத்து.. வைரமுத்துதான் என்று சொல்ல வைக்கிறது வைர வரிகள்..
இனி வரிகள் உங்களுக்காக..





கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு 


கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு 


தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது
மானும் இல்ல மயிலும் இல்ல
தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனது விழுந்து போச்சுது 


அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்


அழுக்கு துணிய உடுத்தி 
அவ தலுக்கி நடக்கும் போது
சுழுக்கு பிடிச்ச மனசு 
அட சொக்குது சொக்குதடா


சுத்தமான தெருவில் 
அவ துப்பி செல்லும் போதும் 
எச்சில் விழுந்த இடத்தில் 
மனம் நிக்குது நிக்குதடா


தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும் 
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்


மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்


விளக்குமாரு பிடிச்சி 
அவ வீதி பெருக்கும் போது
வளைவு நெளிவு பாத்து
மனம் வழுக்க பாக்குதடா


குளிச்சி முடிச்சி வெளியில்
அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில் 
நெஞ்சு தெறிச்சு போகுதடா


அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும்
தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும்  மொத்த அழகு


மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

கேட்டு ரசிக்க....
http://www.youtube.com/watch?v=9LR4vN6BjQg