'விருந்தாளி' படத்தின் மூலமாக பாடலாசிரியர் ஆக அறிமுகமான முருகன் மந்திரம் விரைவில் வெளியாக உள்ள "காதல் பாதை" படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார். எஸ்.எஸ்.குமரனின் இசையில் வெளியாகியுள்ள இப்படத்தின் இடம் பெற்றுள்ள நான்கு பாடல்களும் மெலடி பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"காதல் பாதை" படத்தின் பாடல்களை கேட்டவர்கள் வரிகளையும் சிலாகித்துப் பேசுவதால், உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களின் பாடல்களில் கவிதை மழை பொழிய தயாராகிக் கொண்டிருக்கிறார் முருகன் மந்திரம்.
உதாரணமாக, காதல் பாதை படத்தின் ஒரு பாடலில்,
"இருவிழியில் கலகம் நூறு
இமைகளிலே அவளின் பேரு
தேவதையில் உறவு உறவு
எனக்கு அது, இரவல் சிறகு"
மற்றும்
"இலைகளும் கீழே விழுந்தால்
நதி அதை இழுத்துப் போகும்
நிழல்களை இழுத்துப் போகாதே
வெளிச்சத்தில் தெரியும் வண்ணம்
இருளிலே கருப்பாய்ப் போகும்
கண்ணோடு குற்றம் கிடையாதே"
போன்ற கவித்துவமான பாடல் வரிகளை சொல்லலாம்.
ஏற்கனவே, எஸ்.எஸ்.குமரனின் இசையில் வெளியான "விருந்தாளி" படத்தில் 4 பாடல்களையும், எஸ்.எஸ்.குமரன் தயாரித்து, இயக்கி, இசையமைத்த "தேநீர் விடுதி" படத்தில் 3 பாடல்களையும் முருகன் மந்திரம் எழுதி உள்ளார்.
தற்போது, எஸ்.எஸ்.குமரன் இயக்கம் மற்றும் இசையில் தயாராகிக்கொண்டிருக்கு ம் "கேரள நாட்டிளம் பெண்களுடனே", "ராஜா பாரதி சவுண்ட் சர்விஸ்", "மும்பையில் ஒரு காதல்" உள்பட படங்களில் முருகன் மந்திரம் பாடல்கள் எழுதுகிறார்.
இதுவரை முருகன் மந்திரம் எழுதி வெளியாகியுள்ள பாடல்கள்
பேசுவது கிளியா / இசை: ஏ.ஆர். ரெஹானா / 1 பாடல்
விருந்தாளி / இசை: எஸ்.எஸ்.குமரன் / 4 பாடல்கள்
காதல் தோழி / இசை: வீ.தஷி / 1 பாடல்
காதலை பறிக்காதீர் / இசை : கபிலேஷ்வர் / 1 பாடல்
தேநீர் விடுதி / இசை: எஸ்.எஸ்.குமரன் / 3 பாடல்கள்
பயபுள்ள / இசை : கபிலேஷ்வர் / 1 பாடல்
காதல் பாதை / இசை : எஸ்.எஸ்.குமரன் / 4 பாடல்கள்
No comments:
Post a Comment