இலங்கை வவுனியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனும், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினும் இணைந்து 'காந்தல் பூக்கும் தீவிலே' என்ற இசை ஆல்பத்தை உருவாகியுள்ளனர்.இலங்கையை சேர்ந்த இந்த இரு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய பாடல் இணையத்தளங்களின் இப்பொழுது மிகவும் பிரபல்யம் பெற்றிருக்கின்றது.பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இலங்கையில் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இலங்கை சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசராக தேர்வு செய்யப்பட்டவராவார்.விரைவில் இவர் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்க திட்டமிட்டுள்ளாராம்.Wednesday, November 30, 2011
'காந்தல் பூக்கும் தீவிலே'
இலங்கை வவுனியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனும், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினும் இணைந்து 'காந்தல் பூக்கும் தீவிலே' என்ற இசை ஆல்பத்தை உருவாகியுள்ளனர்.இலங்கையை சேர்ந்த இந்த இரு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய பாடல் இணையத்தளங்களின் இப்பொழுது மிகவும் பிரபல்யம் பெற்றிருக்கின்றது.பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இலங்கையில் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இலங்கை சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசராக தேர்வு செய்யப்பட்டவராவார்.விரைவில் இவர் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்க திட்டமிட்டுள்ளாராம்.Monday, November 21, 2011
மிஷ்கின் படத்தில் பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ்
மிஷ்கின் இயக்கும் 'முகமூடி' படத்தில் பழம் பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார்.
இவரைத் தவிர, முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யுடிவி தயாரிப்பில், ஜீவா - பூஜா ஹெக்டே நடிக்கும் இப் படத்தில் முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார் நரேன்.
இப்போது இந்தப் படத்தில் தெலுங்கின் சாதனை நடிகர் நாகேஸ்வரராவ் முக்கிய வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்..
கே இசையமைக்கும் இந்தப் படம் வரும் நவம்பர் 30ம் தேதி படப்பிடிப்புடன் தொடங்குகிறது.

Saturday, November 19, 2011
பின்னணி பாடகர் ஜேசுதாசின் சாதனை
தனது இனிமையான குரலால் உலக மக்களையும் கவர்ந்திழுத்த பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ், இசைத் துறையில் தனது பொன்விழா ஆண்டில் கால்பதித்துள்ளார். இதுவரை தனது தாய்மொழியான மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 50,000 பாடல்களுக்கும் மேலாக பாடி ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ஜேசுதாஸ். பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் பாடிய நீயும் பொம்மை, நானும் பொம்மை, நினைச்சுப் பார்த்தால் எல்லாம் பொம்மை என்ற பாடலை இன்றும் கூட கேட்டு மகிழலாம். 1961 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதியன்று அவர் தனது முதல் திரைப்படப் பாடலை பாடினார். அப்போது அவர் வெறும் நான்கு வரிகள்தான் பாடினாராம். தற்போது அவருக்கு வயது 71. தனது இனிமையான, மென்மையான குரலால் தமிழ், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் ஜேசுதாஸ்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மன்னன்' திரைப்படத்தில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே! என்று இவர் பாடிய பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. தாயின் பெருமையை பறைசாற்றக் கூடிய இந்தப் பாடலை திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் இன்றைக்கும் பக்தர்கள் கேட்கலாம். கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை சாத்தப்படும் போது ஹரிவராசனம் என்று இவர் பாடிய பாடலைத்தான் இன்றைக்கும் ஒலிபரப்புகிறார்கள்.
இந்தப் பாடலை கேட்டதும் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் ஓடுவார்கள். இந்தப் பாடல் முடிந்ததும் கோயில் நடை சாத்தப்பட்டு விடும். அப்படிப்பட்ட சிறப்பை பெற்றவர்தான் பின்னணி பாடகர் ஜேசுதாஸ். மலையாளத்தைத் தவிர தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒடியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு போன்ற மொழிகளிலும் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் கூட நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியவர்தான் பாடகர் ஜேசுதாஸ். பாடல்களைப் பாடும் போது அர்ப்பணத்தோடு பாடக் கூடியவர் ஜேசுதாஸ். கடின உழைப்பாளியும் கூட. 3 தலைமுறை பின்னணி பாடகிகளுடன் இவர் இணைந்து பாடியிருக்கிறார்.
குறிப்பாக, பி. சுசீலா, எஸ். ஜானகி, பி. லீலா, வாணிஜெயராம், இன்றைய சித்ரா, சுஜாதா போன்ற அனைத்து பாடகிகளுடனும் இணைந்து பாடி பல மென்மையான பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கியவர்தான் ஜேசுதாஸ் என்றால் அது மிகையாகாது.

Friday, November 18, 2011
சிரிக்க வைக்க போகிறார் ஸ்ரீகாந்த்
சேரன், அமீர், ராதா மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் முகமது அஸ்லம். இவர் 'பாகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.தனது முதல் படத்திலேயே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கிறார் முதன்முதலாக ஸ்ரீகாந்த் நகைச்சுவை நாயகனாக இதில் நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக ஜனனிஅய்யர் நடிக்கிறார்.
'பாகன்' படம் குறித்து இயக்குனர் கூறுகையில், "காமெடி கலந்த ஜனரஞ்சகப் படம் பாகன். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி என பக்கா பொழுதுபோக்குப் படம் இது. . காட்சிக்குக் காட்சி காமெடியில் ஸ்ரீகாந்த் அசத்தியிருக்கிறார்.. அவருக்குள் இத்தனை பெரிய நகைச்சுவை கலைஞர் ஒளிந்திருந்தாரா என எல்லாருமே கேட்கும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ரஜினி சாருக்கு ஒரு தில்லுமுல்லு மாதிரி, ஸ்ரீகாந்துக்கு இந்தப் பாகன் அமையும்," என்றவரிடம் படத்தின் கதை குறித்து கேட்டோம்.
"உருவத்தில் பெரிய யானையை சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்சினைகள் நிறைந்த இந்த பெரிய வாழ்க்கையை சமாளித்து வாழ்பவனே ஹீரோ. வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடு செல்லுவோர் மத்தியில், வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடு செல்லாமல் தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னேறுகிறான் இந்த பாகன். இந்த மண்ணின் மீது அவ்வளவு காதல்.
என் படத்தில் என் குருநாதர்கள் சேரன், அமீர், ராதா மோகன் பாதிப்பு இருக்கும். காரணம், அவர்களைப் பிடித்துப் போய், அவர் படங்களை ரசித்து அவர்களுடன் பணியாற்றியவன் நான். அதனால் என் படைப்பிலும் அவர்களின் பாதிப்பு இருக்கும். அது தவறும் அல்ல," என்றார் முகமது அஸ்லம்.
. ஸ்ரீகாந்தின் அம்மாவாக கோவை சரளாவும், அப்பாவாக ஜார்ஜும், நண்பர்களாக சூரி, அங்காடித் தெரு பாண்டியும் நடிக்கின்றனர்.
ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம் படங்களில் பணியாற்றிய லஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆன்டனியின் உதவியாளர் கெவின் இந்தப் படம் மூலம் எடிட்டராக அறிமுகமாகிறார்.
மும்பையின் லோனாவாலா, பொள்ளாச்சி மற்றும் வெளிநாடுகளில் படமாகிறது பாகன்.

'காந்திகணக்கு' படத் தலைப்புக்கு தணிக்கை குழு எதிர்ப்பு..!
'பூஜா பிலிம் இன்டர்நேஷனல்' எனும் படநிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காந்தி கணக்கு'.இப்படத்தில் ரமணா கதாநாயகனாகவும்,ரீச்சா சின்ஹா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.இவர்களுடன் மனோபாலா,சரவண சுப்பையா, ஸ்ரீநாத்,தேவதர்ஷினி,'லொள்ளுசபா
' ஜீவா,ஐசக்,முத்துக்காளை,சூர்யா பி.சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸ் கவனித்துள்ளார்.கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சம்பத் ஆறுமுகம்.( இயக்குனர் சசியின் உதவியாளர்).ஜி.பி.எஸ்.தயாரித்து ள்ளார்.
படம் திரையிடுவதற்கு தயாராக உள்ள நிலையில் படத்தின் தலைப்புக்கு தணிக்கை குழு அதிகாரிகள் அனுமதி அளிக்காததால் படத்தின் தலைப்பு 'மகான் கணக்கு 'என மாற்றப்பட்டுள்ளது.இது பற்றி இயக்குனர் சம்பத் ஆறுமுகம் கூறியதாவது:
"காந்தி கணக்கு' படப் பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யும் போது படத்தின் கதையையும்,தலைப்பிற்கான விளக்கத்தையும் சொன்னபோது அதை ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தார்கள்.
தற்போது பட வேலைகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.தணிக்கைக்கு அனுப்பியபோது தலைப்பை மாற்றிவிட்டு வந்தால் தான் படமே பார்ப்போம் என தணிக்கை குழு அதிகாரிகள் சொன்னார்கள்.முதலில் படத்தை பாருங்கள்.பார்த்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் என்று தலைப்பு வைத்ததற்கான விளக்கத்தையும் சொன்னோம்.அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.அத்துடன் முதலில் படத்தோட தலைப்புக்கே சென்சார் தான் அதை மாற்றி விடுங்கள் என விடாப்பிடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
'நேர்மையற்ற எந்த ஒரு வியாபாரமும் வன்முறைக்கு வித்திடும்' இதுதான் காந்தியோட கணக்கு.இதைத் தான் படத்தில் சொல்லியிருக்கிறோம்.உலகம் முழுவதும் காந்தியோட கணக்கு அகிம்சை கணக்கு என்பது தெரியும்.தமிழ் நாட்டில் மட்டும் காந்தி கணக்கு என்றால் வராத கணக்கு என்று தப்பான அர்த்தமாக எடுத்துக்கிறாங்க.
சுதந்திரத்திற்காக போராடினார் காந்தி.'காந்தி கணக்கு' என்கிற வார்த்தைக்கு இருக்கிற தப்பான அர்த்தத்தை மாற்றுவதற்கு எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.இது எனக்கு வருத்தத்தை தந்தாலும் படம் திரைக்கு வர தாமதமாக கூடாது என்ற எண்ணத்திலும்,தலைப்பு மாறினாலும் சொல்லப்பட்டுள்ள கருத்து நிச்சயம் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையிலும் தலைப்பை மாற்ற சம்மதித்தோம்.
நம்ம நாட்டுல எவ்வளவோ மகான்கள் வாழ்ந்திருக்காங்க.வாழ்ந்திட்டு இருக்காங்க.காந்தியும் ஒரு மகான் தான். அதனால் தான் 'காந்தி கணக்கு 'படப் பெயரை மகான் கணக்கு என்று மாற்றியுள்ளோம்.
படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், ''எந்தவித ஆபாச,வன்முறை காட்சிகள் இல்லாமல் சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான படம் இது.நீங்க பண்ற படங்கள் எல்லாம் இந்த மாதிரி சமூக அக்கறையுள்ள படமாக அமையுட்டும்ன்னு வாழ்த்துறோம்." என மனம் திறந்து பாராட்டினார்கள்.படத்திற்கு ' U ' சான்றிதல் வழங்கியுள்ளனர். 'மகான் கணக்கு' படத்தை திரையிடுவதற்கான முயற்சியில் உள்ளோம்." என்றார் இயக்குனர் சம்பத் ஆறுமுகம்.

Subscribe to:
Posts (Atom)