சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்
உருமி திரைப்படத்தின் நாயகர்கள் ஆர்யா, பிரித்விராஜ், இசையமைப்பாளர்
தீபக் தேவ் மற்றும் உருமி படத்தின் ஆடை வடிமைப்பாளர் ஏகா ஆகியோர் தமிழ்
ரசிகர்களுக்கு தங்களது நன்றியினை தெரித்துக்
கொண்டனர்.
நடிகர்
பிருத்விராஜ் உருமியின் வெற்றி குறித்துப் பேசும் போது, “ நேற்று
(புதன் கிழமை) இரவுக் காட்சிக்கு சத்யம் திரையரங்குக்குச் சென்ற போது இது நம்ம
படம்தானா என்கிற சந்தேகமே வந்துவிட்டது..அந்த அளவிற்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக
உருமி ஓடிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி… எங்களது கடின உழைப்பினை
அங்கீகரித்த தமிழ் ரசிகர்களுக்கு இதய பூர்வமான நன்றிகள்.
உருமி ஒரு
வருடத்திற்கு முன் மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும்…தமிழுக்கென்று
பாடல், திரைக்கதை அமைத்து இப்பொழுது
வெளியாகியிருக்கிறது.
ராவண்
படத்தில் நானும் சந்தோஷ் சிவனும் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் உருமி படம்
தயாரிப்பதற்கான சிந்தனை வித்திட்டது. படம் எடுக்கும் ஆரம்பிக்கும் முன்பே இது இந்த
மொழி பேசும் மக்களுக்கான படம் என்று இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள்
ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளும் படமாக ஒரு கலையாக இருக்க வேண்டும் என்று முடிவு
செய்து எடுக்கப்பட்ட படம்.
உருமி
மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். சந்தோஷ்
சிவனின் திட்டமிட்ட உழைப்பில் கிட்டத்தட்ட 65 நாட்களில்
எடுக்கப்பட்ட படம்.
ஆர்யா,பிரபுதேவா, ஜெனிலியா, வித்யாபாலன், நித்யா
மேனன் , தபு என்று இந்தியத் திரையுலகின் முன்னணி
நட்சத்திரங்கள் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நமது முன்னோர்களின் வீரம், பண்பு, கலாச்சாரம்
மற்றும் அந்நியர்களை எதிர்த்துப் போராடிய தீரம் ஆகிய வற்றை பதிவு செய்யும்
படமாகையால் மிகவும் ஆர்வத்துடன் நடித்தனர்.
மிகச்சிறந்த
நடிகர்கள் மத்தியில் நானும் நடித்திருப்பதால்
எனக்கான ஒரு தனி அடையாளமாக எனது கதாபாத்திரம் அமைந்து விட்டது. 14-15 ஆம்
நூற்றாண்டுகளில் நம் மீது திணிக்கப் பட்ட அந்நிய ஆதிக்கம் இன்னும் பல ரூபங்களில்
நம்மை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது….பொருட்கள் வடிவிலும்
அறிவு சார்ந்த வகையிலும்….
இந்தப்
படத்திற்காக 6 மாதங்கள் கடினமாக உழைத்து எனது உடலை
முறுக்கேற்றினேன்… எனது தமிழ் உச்சரிப்பு மிகவும் கம்பீரமாகவும்
சிறப்பாகவும் வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எனது நண்பரும் உருமியின்
வசனகர்த்தாவுமான சசிகுமார்தான்…
மலையாளம், தெலுங்கு
மற்றும் தமிழ் பேசிவிட்ட உருமி விரைவில் ஆங்கிலம் பேச இருக்கிறது. இந்தப் படத்தின்
தொலைக்காட்சி உரிமை ஜப்பான் வாங்கியிருப்பதே உருமியின் வெற்றிக்குச் சான்று.
படத்தின்
முக்கியத்துவம் சிதைந்து விடாமல் தமிழில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து
வெளியிட்டிருப்பது போன்று ஹிந்தியில் யாராவது முன்வந்தால் நிச்சயம் ஹிந்தியிலும்
உருமி வெளியாகும்…
இன்னும்
பத்து வருடம் கழித்துப் பார்த்தாலும் புதிதாகத் தெரியும் அளவிற்கு காட்சிகளை
அமைத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் சிவன்…” என்று
கூறினார்.
சிறிய வயது
பிரித்விராஜின் அப்பாவாக வாஸ்கோடகாமாவை எதிர்க்கும் முதல் இந்திய அரசன் சேதுராயன் நடித்திருக்கும்
ஆர்யா, “ சந்தோஷ் சிவன் படத்தில் நடிப்பது என்பது எனது மிகப்பெரிய
கனவு. எனது
சம்பந்தப் பட்ட காட்சிகளை மூன்றே நாட்களில் எடுத்திருந்தாலும் எனது கதாபாத்திரத்தை
மிகவும் பேசப்படும் ஒன்றாக காட்டியிருப்பது நிச்சயமாக சந்தோஷ் சிவனின் மேஜிக் தான்… 3 நாட்கள்
தான் நடித்திருக்கிறேன் என்றாலும் 20 நாட்கள் டப்பிங்
பேசியிருக்கிறேன்…. இது போன்ற வரலாற்றுக் களங்களை அடிப்படையாகக்
கொண்டு எடுக்கப் படும் படங்களில் நடிக்க
மிகவும் ஆர்வமாக உள்ளேன்….” என்றார்.
2003 இல் மலையாள
இயக்குனர் சித்திக்-ஆல் மம்மூட்டி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கிரோனிக்
பேச்சிலர் என்ற படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த
தீபக் தேவ் தான் உருமியின் மிரட்டலான இசைக்கும் சொந்தக்காரர்.
தீபக்
தேவிடம் - உருமியின் சவாலான இசையைப்பற்றிக் கேட்டபொழுது,” படம்
ஆரம்பிக்கும் முன்பே இது பலமொழிகளில் வெளியாகப் போகும் படம் என்று இயக்குனர்
கூறிவிட்டதால் உருமியின் இசை எல்லா மொழிகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்று
முடிவு செய்து இசையமைத்தேன்… மேலும் இந்தப்
படத்திற்கு நவீன இசைக்கருவிகள் ஏதும் பயன்படுத்த முடியாது… முழுக்க
முழுக்கப் பழமையான நமது நாட்டுப்புற இசைக்கருவிகளைக் கொண்டே முழுப்பின்னணி
இசையையும் மற்றும் பாடல்களுக்கான இசையையும் அமைத்துள்ளேன்…. தென்னிந்திய
சினிமா என்று எடுத்துக் கொண்டால் அது சந்தேகமே இல்லாமல் தமிழ்சினிமாதான் …இங்குதான்
கடின உழைப்பிற்குச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்… உருமியின்
இசைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது… தமிழ் ரசிகர்களுக்கு
நன்றி… இயக்குனர் சந்தோஷ் சிவன் காட்சிகளை விவரித்த
போதே உருமி என் சிந்தனையில் படமாக ஓட ஆரம்பித்து விட்டது..” என்று
கூறினார்.
14-15 ஆம் நூற்றாண்டு
உடைகளுக்கு எந்த விதமான ஆதாரங்களும் குறிப்புகளும் இல்லாத நிலையில் உருமியில்
வரும் அரசர் முதல் போராளி, சாமான்ய மக்கள், பெண்கள்
குழந்தைகள் என்று அனைவருக்கும் மிகவும் அற்புதமான ஆடைகளை வடிவமைத்திருக்கும் ஏகா, மும்பையைச்
சேர்ந்த ஃபேஷன் டிசைனர் மற்றும் ராவண் படத்தில்
உதவி ஆடை வடிவமைப்பாளர். தனது முதலாவது படமான உருமிக்கு புகழ்பெற்ற ஓவியர்
ரவிவர்மாவின் ஓவியங்களில் அவர் வரைந்துள்ள ஆடைகளே அடிப்படை என்கிறார். அத்துடன்
மேலும் சில வரலாற்று ஆதாராங்களையும் வைத்து உருமி படத்திற்கு மிகவும் பொருத்தமான
ஆடைகளை வடிவமைத்ததாகக் கூறினார் ஏகா.

Kozhanthaiyaaga naditha prithiviraj name enna romba azhaga Kovathai kaatiullar. .
ReplyDelete