Tuesday, March 19, 2013

திரைப்பட கல்லூரி மாணவர்கள் உண்ணா விரத போராட்டம்

இலங்கை  தமிழர்களுக்கு ஆதரவாக, அவர்களின் வாழ்வுரிமையை  மீட்டு எடுக்க ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இலங்கை மீது பொருளாதார் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு எடுதத  தீர்மானத்திற்கு ஆதரவாகவும், நாளை (20.03.2013) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை  ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க திரைப்பட கல்லூரி மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் அரசு திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு பயின்ற முன்னாள், இந்நாள் மாணவ-மாணவிகள் என 1000க்கும் மேற்பட்ட கலந்து கொள்கின்றனர்.  
அரசு திரைப்பட கல்லூரி வாயிலில் நடைபெறும் போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மாணவர்கள் ஆபாவணன், உளவுத்துறை ரமேஷ் செல்வன், சித்திரை செல்வன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment