"காதலை மையமாக வைத்து
ஏராளமான படங்களும்,
நட்பை மையப்படுத்தி
ஏராளமான படங்களும்
தமிழ்சினிமாவில் இதற்கு முன் நிறைய வந்திருக்கின்றன.
ஆனால் ஒரு
புது விதமான
நட்பையும் அதன்
பெருமையையும் சொல்லப் போகிறேன்" என்கிறார் ''முகம் நீ அகம் நான்'
படத்தின் இயக்குனர் ரா.நா.சரவணன்.
இப்படத்தை பற்றி சரவணன்
மேலும் கூறும்போது
"ஒரு திரைப்படம் என்பது
பலரது கூட்டு
முயற்சி. சின்ன
சின்ன விஷயங்களுக்கே
தடையும் தாமதமும்
வருவது சகஜம்.
ஒரு திரைப்படத்தை
தயாரிக்கும்போது எவ்வளவு பிரச்சனைகள் வரும்? ஆனால்
அதையெல்லாம் மீறி எனக்கும் தயாரிப்பாளர் பா.எழில் இனியனுக்கும்
தோள் கொடுக்கிற
கலைஞர்கள் கிடைத்ததுதான்
நாங்கள் செய்த
பாக்கியம்.
இப்படத்தில் நம்மை இரவில்
து£ங்க
விடாமல் தவிக்க
விடும் கொசுவை
பற்றி ஒரு
பாடல் வருகிறது.
அந்த பாடலை
நானே எழுதியிருக்கிறேன்.
ஏ கூறுகெட்ட பிறப்பே,
கூவத்தோட சிறப்பே
நித்தம் பெருகிறீயே கொசுவே,
சித்தம் கதி கலங்க
நித்தம் கடிக்கிறீயே
கொசுவே
ரத்தம் குடிக்கிறீயே கொசுவே
என்று துவங்கும் இப்பாடலை
புஷ்பவனம் குப்புசாமி
பாடியிருக்கிறார். மோகன்ஜி இசையமைத்திருக்கிறார்.
நடன இயக்குனர்
கூல் ஜெயந்த்தும்,
மைனா புகழ்
நாகலட்சுமியும் ஆடியிருக்கிறார்கள்.
இந்த கொசுப் பாடலில்
ஒரு காட்சியில்
நடித்தும் இருக்கிறேன்.
கதாநாயகியாக ஹாசினி நடிக்கிறார்.
கதாநாயகனாக சீனுவாசன் அறிமுகமாகிறார். சினிமாவுக்காக இவருக்கு
எஸ்.எஸ்.வாசன் என்று
பெயர் மாற்றப்பட்டுள்ளது.
லேகியம் விற்கிறவராக நடிக்கிறார்
கஞ்சா கருப்பு.
இப்படத்திற்காக இரட்டை குழந்தைகளை
நடிக்க வைக்க
விரும்பி சுமார்
நு£ற்றுக்கும்
மேற்பட்ட ஜோடி
சிறுவர்களை சந்தித்து . இறுதியில்
மறைந்த நகைச்சுவை
நடிகர் கே.ஏ.தங்கவேலுவின்
பேரன்கள் சஞ்சய்,
கிஷோர் ஆகியோரை
கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளோம்".என்கிறார்.
ரா.நா.சரவணனின் தந்தை ராதா ஒரு தெருக்கூத்து கலைஞர். ஏராளமான மேடை நாடங்களை அரங்கேற்றியிருக்கிறார். அவரைப்போலவே சரவணனும் மேடை நாடகங்களை இயக்கி நடித்தவர்தான். அதுமட்டுமல்ல, பத்திரிகைகளில் சினிமா நிருபராக பணியாற்றியிருக்கிறார். முக்கியமாக இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இயக்குனராகியிருக்கிறார்

No comments:
Post a Comment