சீனு ராம சாமி இயக்கத்தில் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று ' படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த தமிழ் படம் என 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. விருது கிடைத்திருப்பது பற்றி டைரக்டர் சீனு ராமசாமி கூறும்போது :
"தென் மேற்கு பருவக்காற்று படத்தில் தாய் கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருந்தேன். அந்த கதாபத்திரத்தை உருவாக்கியதுமே என் மனதில் முதலில் வந்தது சரண்யா மேடம் தான். சுமிதா படேல், சபானா ஆஸ்மி மாதிரி மிகச்சிறந்த நடிகை அவங்க. இந்தப்படத்தின் மூலமா அதை நிரூபிச்சிருக்காங்க. படத்துல ஒரு காட்சியில் கத்திக்குத்துப் பட்டு அதை துணியால் கட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போகுற மாதிரி வரும். ஒரு வைராக்கியம் நிறைந்த கிராமத்து தாயா, வலியை தாங்கிட்டு அவர் பேசுகிற அந்த காட்சியில், அவர் முகப் பாவனையை வெளிபடுத்திய போது நிச்சயம் அவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்று அப்போதே உணர்ந்தேன்.
முழுப்படத்தையும் எடுத்து முடித்து விட்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு போட்டுக் காட்டினேன். கிழக்கு சீமையிலே படத்துக்குப் பிறகு நான் நெகிழ்ந்த படம் என்று சொன்னார். அந்த படத்தில் கல் மனதையும் கலங்க வைக்கும் தாயைப்பற்றியான ஒரு பாடலை எழுதிக்கொடுத்தார். இந்தப் பாடலுக்காக நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று நம்பினேன். மூன்றாவதாக படத்திற்கும் சேர்த்து விருது கிடைத்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. இதுவரை எடுக்கப்பட்டுள்ள கிராமத்துப் படங்களில் இருந்து மாறுபட்டு முதன்முறையாக புவியியல் சார்ந்த கதையாக உருவான படம் இது. அதற்கு விருது கிடைத்திருக்கிறது.
ஒரு படைப்பாளியாக என் படைப்புக்கு, அதன் உழைப்புக்கு 3 விருதுகள் கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது. இந்த விருதை எந்த நேரமும் திருச்செந்தூர் முருகனை எனக்காக வேண்டிக்கொண்டிருக்கும் என் தாய் கோவிந்தம்மாளுக்கும், வல்வட்டி துறை பார்வதியம்மாளுக்கும் (பிரபாகரனின் தாயார்) யாருமே தயாரிக்க வராத சூழலில் என் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரித்த கேப்டன் சிபு ஐசக் அவர்களுக்கும், என் குருநாதர் பாலு மகேந்திராவுக்கும் சமர்பிக்கிறேன்" என்றார்.

No comments:
Post a Comment