இத்தாலி நாட்டில் மிலன் நகரில் உள்ள மிலன் பல்கலைக்கழகம் (Universita Popolare Degali Studi Di Milano-UUPN) மிலன் மக்கள் பல்கலைக்கழகம் என்றும் இதனை அழைக்கின்றனர். நுண்கலை மற்றும் நடிப்புப் பிரிவில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் பட்டம் வழங்குகிறது இந்த பல்கலைக்கழகம். இந்த ஆண்டு தமிழ் திரைப்பட நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெறும் முதல் நடிகர் விக்ரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2011, மே 29ஆம் தேதியன்று மிலன் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் மார்கோ கிராபிசியா, துணைத் தலைவர் மற்றும் செனட் உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த கெளரவ டாக்டர் பட்டம் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.
பட்டத்தை பெற்றுகொண்ட விக்ரம், பின்னர் மாணவர்கள் மற்றும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் உரையாற்றினார்

No comments:
Post a Comment