Wednesday, May 18, 2011

நடிகருடன் குடும்பம் நடத்தும் நடிகரின் மகள்

 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானவர் சித்தார்த் .அதன் பிறகு தெலுங்கு படவுலகுக்கு போனார். தொடர்ந்து வாய்ப்புகள் வர அங்கேயே செட்டில் ஆனார்.அவருக்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் கமல்ஹாசன் மகள் சுருதி ஹாசன் நடித்தார்,இந்த படத்தில் நடிக்கும் போதே இருவரும் நெருங்கிப் பழகினர் அது காதலாகவும் மாறியது.ஆனால் 'அது காதல் அல்ல வெறும்  நட்பு தான் 'என இருவருமே சொல்லி வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு '180 ' என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார் சித்தார்த்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த சித்தார்த்திடம் ஸ்ருதியுடான காதலை பற்றி கேட்டபோது கூட 'அவர் எனக்கு நல்ல தோழி அவ்வளவுதான்.'என நழுவினார்.
யார் தான் ஆரம்பத்தில் காதலை ஒத்துக்கொண்டனர்? இப்படி வெளியில் இவர்கள் காதலை மறைத்தாலும் நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கி இப்போது இருவரும் லிவிங் டூ கெதர் பாணியில் ஒன்றாக வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுபற்றிய செய்தி வெளியிட்ட ஒரு ஆங்கில பத்திரிகை ,இந்த தகவலை சொல்லி கமல்ஹாசனிடம் கேட்டபோது அவர் மறுப்பெதுவும் தெரிவிக்கவில்லை என்றும் எழுதியுள்ளது.இது பற்றி ஸ்ருதிடம் கேட்டால் , "நான் சினிமா வாழ்க்கையையும் ,நிஜ
வாழ்க்கையையும் ஒன்றாக கலப்பதில்லை ,சினிமாவைப் பற்றி கேளுங்கள்.பதில் சொல்கிறேன்.என சொந்த  வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அதைப் பற்றி மீடியாவில் வெளிப்படையாக பேச எனக்கு விருப்பமில்லை.எனது உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்" என்று பதில் தருகிறார்.
ஆரம்பத்தில் கமல்ஹாசனும் சரிகாவும்
லிவிங் டூ கெதர் பாணியில் ஒன்றாக வாழ்ந்து.. பிறகு திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மகளும் அதை கடைப்பிடிக்கிராரோ என்னவோ..?

No comments:

Post a Comment