![]() |
"சூப்பர்ஸ்டாராக பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்து பேரும் புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நலமில்லை என்பதை அறிந்து துடிதுடித்துப்போய்விட்டேன். என்னை சினிமாவுக்கு கொண்டு வந்ததே சூப்பர்ஸ்டார்தான். அவரைப் போலவே தீவிர ராகவேந்திரர் பக்தனான நான், ராகவேந்திரருக்காக திருக்கோவில் கட்ட தீர்மானித்தபோது, சிலை வடிவமைக்க மாதிரி புகைப்படம் ஒன்றைக் கொடுத்து, இதுபோல் சிலை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவரது எண்ணப்படியே சிலையை வடித்து ஆவடியில் ராகவேந்திரருக்கு திருக்கோவிலை நிர்மாணித்தோம்.
திரு.ரஜினி அவர்களின் எண்ணப்படி கட்டப்பட்ட ராகவேந்திரர் திருக்கோவிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை 22.05.2011 அன்று காலை 6.30 மணிக்கு, திரு.ரஜினி அவர்கள் உடல்நலம் பெற வேண்டி, 108 குடம் பாலாபிஷேகம் செய்து, கூட்டுப்பிரார்த்தனை செய்ய இருக்கிறோம்.
திரு.ரஜினி அவர்களின் உடல்நலத்துக்காக நடைபெற உள்ள இந்த கூட்டுப்பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ரஜினி அவர்களின் ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டு இந்த கூட்டுப்பிரார்த்தனை சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பிரார்த்தனை செய்யவும்.
கோடானுகோடி மக்களின் சார்பாக கடவுளின் முன் வைக்கப்படும் நம் கோரிக்கை ஏற்று நிச்சயம் கடவுள் அருள் புரிவார். திரு.ரஜினி அவர்களும் நலம் பெறுவார்."
இவ்வாறு தன அறிக்கையில் கூறியுள்ளார்


No comments:
Post a Comment